10 சீட்டு + தேர்தல் செலவுக்கு பணம் - வைகோவுக்கு தினகரன் வலை

10 சீட்டு + தேர்தல் செலவுக்கு பணம் - வைகோவுக்கு தினகரன் வலை

10 சீட்டு + தேர்தல் செலவுக்கு பணம் - வைகோவுக்கு தினகரன் வலை 

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்த திமுக, அடுத்து தங்களை அழைக்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேசிவருகிறது.  இது தங்களை உதாசீனப்படுத்துவதாக மதிமுக நினைக்கிறது.

2 தொகுதிகளுக்கு மேல் கிடையாது, அதுவும் உதய சூரியன் சின்னத்தில் தான் என்று திமுக நிபந்தனை விடுத்துள்ளது. 5 தொகுதிகள் அதுவும் பம்பரம் சின்னத்தில் தான் நிற்போம் என்று வைகோ பிடிவாதம் பிடிக்க, 'பிறகு பேசுவோம்' என்று திமுக கூறியுள்ளது.

சுயமரியாதை இழந்து, உதய சூரியன் சின்னத்தில் நிற்பதை விட, கட்சியை கலைத்துவிட்டு திராவிடர் கழகம் போல அரசியல் சார்பற்ற அமைப்பாகி விடலாம் என்று மதிமுகவினர் குமுறுகின்றனர்.  குறைந்தபட்சம் 3 அதுவும் பம்பரம் சின்னத்தில், இல்லாவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்பது அவர்கள் எண்ணம்.

இதை மோப்பம் பிடித்த டி.டி.வி. தரப்பு, நாங்கள் மூன்றாவது அணி அமைக்க போகிறோம்.   வேல்முருகன், அன்சாரி மற்றும் சில ஜாதி கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இருக்கின்றன.  நீங்கள் வாருங்கள், 10 இடங்கள் தருகிறோம், தேர்தல் செலவும் எங்களுடையது, துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று தூது விடுக்கப்பட்டுள்ளது.  அதிமுக பாஜக பாமக கூட்டணி அமைத்துள்ள நிலையில்,  அமமுக நிர்வாகிகள் தாய் கட்சிக்கு ஓட ஆயத்தமாக உள்ளதை அறிந்த தினகரன், தானும் ஒரு பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, சொந்த கட்சிக்காரர்களை தக்க வைக்க முடியும் என்பதால், அவருக்கும் மூன்றாவது அணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதை வைகோவும் பரிசீலிப்பதாக தெரிகிறது. அடுத்த 2 நாட்களுக்குள் திமுக தரப்பு இறங்கிவராவிட்டால், வைகோ தினகரன் அணியில் இணைவார் என தெரிகிறது.   மதிமுக வின் செயற்குழு திங்களன்று கூடுகிறது, அன்றைய தினம் இது பற்றி விவாதிக்கப்படும் எனவும் தெரிகிறது.

திருமாவளவனையும் தன் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு முயற்சிப்பதாகவும், ஆனால் அவரோ, 'வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால், மிச்சமாகும் இடங்கள் தனக்கு கிடைக்கும்' என்பதால் பொறுமை காப்பதாக தெரிகிறது. தினகரன் கூட்டணியில் 5ல் போட்டியிடுவதை விட, திமுக கூட்டணியில் 2 கிடைத்தாலே போதும் என்று அவர் கருதுகிறார்.