13ம் நாள் காரியம் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து

13ம் நாள் காரியம் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து

இறந்தவர்களுக்கு சில இடங்களில் 13ம் நாள் காரியம் நடத்தப்படுகிறது. மற்ற இடங்களில் 16ம் நாள் காரியம் நடத்தபடுகிறது. புல்வாமாவில் இம்மாதம் 14ம் தேதியன்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 40 மத்திய ரிசர்வ் படை போலீசார் உயிரிழந்தனர். நேற்று 12 நாட்கள் கடந்து 13ம் நாள் தொடங்கியது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்திய விமானப்படையினர் குண்டு மாரிபொழிந்து 350 பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதை 13ம் நாள் காரியத்துடன் ஒப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்துள்ளார்.