15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு

15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு

நேற்று முன்தினம் துவங்கிய 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு இன்று நிறைவு பெறுகிறது. இந்த மாநாடு உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று முன்தினம் இளைஞர் விழாவாக கொண்டாடப்பட்டது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார். 

இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்ற உள்ளார். குடியரசு தலைவர் உரையுடன் மாநாடு நிறைவு பெறுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விருதுகளையும் குடியரசு தலைவர் வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். 

மாநாடு முடிந்ததும் அவர்கள் பிரயாக் ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொள்ள உள்ளனர்.