2 அதிவிரைவு ஏவுகணைகள் சோதனை வெற்றி

2 அதிவிரைவு ஏவுகணைகள் சோதனை வெற்றி

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 அதிவிரைவு ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தரையிலிருந்து செலுத்தப்படும் இந்த ஏவுகணைகள், விண்ணில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவையாகும். தரையிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தன. 

இந்த அதிவிரைவு ஏவுகணைகள், 30 கிமீ தொலைவிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை ஆகும். மேலும், அனைத்துவிதக் காலநிலைகளிலும் இயங்கக் கூடியதாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.