2025க்கு பின் பாகிஸ்தான் இருக்காது ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

2025க்கு பின் பாகிஸ்தான் இருக்காது ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. 1947 வரை, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான், பாகிஸ்தான் இருந்தது. ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்துக்கு எதிராக, முதல் முறையாக, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; அது, நம், 'அகண்ட பாரதம்' என்ற கனவை நனவாக்க, வழி வகுத்துள்ளது. 

அதனால், 2025ம் ஆண்டுக்கு பின், பாகிஸ்தான் இருக்காது; அது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியிருக்கும். நாம் அனைவரும், லாகூர்,கராச்சியில் சொத்து வாங்கலாம். மானசரோவர், கைலாசம் செல்வதற்கு, சீனாவின் அனுமதியை நாட வேண்டிய அவசியமில்லை; லாகூர் வழியாக செல்லலாம். வங்கதேசத்தில், நமக்கு சாதகமான அரசு இருக்கும். ஆறு ஆண்டுகளுக்கு பின், ஐரோப்பிய யூனியன் போல், பாரதிய யூனியன் என்ற அமைப்பு உருவாகும்.ஒரு தேசத்தில், அரசியல் சட்டம், கொடி, குடிமக்கள் உரிமை ஆகியவை, ஒரே மாதிரியாகத் தான் இருக்க வேண்டும். 

இதையடுத்து ஆறு ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் இருக்காது; அது, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்திருக்கும்,'' என, தலைநகர் மும்பையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.