3 முக்கிய திட்டங்களால் மோடிக்கு அமோக ஆதரவு, தாக்கத்தை ஏற்படுத்தாத ரஃபேல்- கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

3 முக்கிய திட்டங்களால் மோடிக்கு அமோக ஆதரவு, தாக்கத்தை ஏற்படுத்தாத ரஃபேல்- கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

பாலகோட் தாக்குதல், 10% இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ஆகிய திட்டங்களால் மோடிக்கு அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளதாகவும், ரஃபேல் விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

லோக்நிதி- தி இந்து ஆங்கில நாளிதழ், திரங்கா தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் ஆகியவை இணைந்து மார்ச் கடைசி வாரத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தின. இதற்காக இந்தியா முழுவதும் இருந்து 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனவரி 7-ம் இருந்து பிப்ரவரி 26 வரை அறிவித்த சில திட்டங்கள் தேர்தல் நேரத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அதேபோல பிப்ரவரி கடைசியில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாலகோட் தாக்குதலை நடத்தியது. 

இவற்றின் மூலம் மோடிக்கான ஆதரவு 9% அதிகரித்துள்ளது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2014-ம் ஆண்டு மோடிக்கு 34% ஆதரவு பதிவாகி இருந்தது. அதே வேளையில் தற்போது மோடி அரசின் 3 திட்டங்கள் மூலம் அவருக்கான ஆதரவு 9% உயர்ந்து 43% மக்கள் அவரை ஆதரிக்கின்றனர். 2018-ன் கடைசியில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், மோடிக்கான ஆதரவு அதிகரித்திருப்பதை நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.

மோடி பிரதமர் ஆகவேண்டும் (%)ராகுல் பிரதமராக வேண்டும் (%)
பாலகோட் தாக்குதல் குறித்து தெரியாது3224
தெரியும்4624
இட ஒதுக்கீடு குறித்து தெரியாது3724
தெரியும்4824
கடந்த மாதத்தில் அரசிடம் இருந்து நிதி பெறாத விவசாயிகள்4227
நிதி பெற்ற விவசாயிகள்5422


பாலகோட், இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு நிதி ஆகியவை வாக்காளர்கள் ஆளும் பாஜக அரசுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா இல்லையா என்பதை முடிவுசெய்வதில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவ தாக்குதல் குறித்து படித்தவர்களும் கேட்டவர்களும் (50 சதவீதத்தினர்) மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக) வரவேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர். தாக்குதல் குறித்து அறிந்திராதவர்கள் 30 சதவீதம் பேரே மோடி மீண்டும் வர ஆசைப்படுகின்றனர். 

இதற்கிடையில், பாஜக மீதான ரஃபேல் விமான ஒப்பந்த சர்ச்சையும், காங்கிரஸின் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஃபேல் சர்ச்சை குறித்து பாதிப் பேருக்குத் தெரியவில்லை. மீதமுள்ள பாதிப்பேரில், சிலர் அரசு மீதான நம்பகத்தன்மையை இழக்கவில்லை.