321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்

321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. அவ்வியக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘அமாக்’ இணையத்தளத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.