34 வருடங்களுக்கு பின் ஒரு நீதி

34 வருடங்களுக்கு பின் ஒரு நீதி

1984ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார். சுட்டவர் ஒரு சீக்கியர் என்கிற ஒரே காரணத்துக்காக, டில்லி, ஹரியானா, மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், சீக்கியர்கள் மீது வன்முறையை ஏவி விட்டது காங்கிரஸ். இந்த வன்முறையில் 2500க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர், பல கோடி ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஜெகதீஷ் டைட்லர், சாஜன் குமார் உட்பட ஏராளமான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடந்த வழக்குகளில் 442 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது நீதிமன்றம் தண்டனை விதித்தது. நேற்று டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாஜன் குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.