370 ரத்துக்கு ஆதரவாக பேசிய டெல்லி முஸ்லிம் பெண்ணுக்கு பாகிஸ்தானியர்கள் ‘சிரச்சேத’ தண்டனை அறிவிப்பு!!

370 ரத்துக்கு ஆதரவாக பேசிய டெல்லி முஸ்லிம் பெண்ணுக்கு பாகிஸ்தானியர்கள் ‘சிரச்சேத’ தண்டனை அறிவிப்பு!!

இந்தியா டுடே க்ரூப் பத்திரிக்கையின் 24 மணி நேர ஹிந்தி தொலைக் காட்சியான ‘ஆஜ் – தக்’ சேனலில் செய்தி தொடர்பாளராக பணியாற்றுபவர் நிடாகான். இஸ்லாமிய பெண்ணான இவர் தொலைக் காட்சியில் சென்ற சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் 370 ரத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் முதல் சுதந்திரப்பண்டிகை என மகிழ்ச்சியுடன் வர்ணித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும் அவர் பேசினார். மேலும் காஷ்மீரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மூவர்ண தேசியக் கோடியை ஏற்றி கொண்டாடுவோம் என நிகழ்ச்சியில் பேசினார். 

இது பாகிஸ்தானில் உள்ள முக்கிய யூ ட்யூப் தளங்கள் மூலமாக அதிகம் பகிரப்பட்டது. இதை அடுத்து அவருக்கு பாகிஸ்தானில் இருந்து பல கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் சில பாகிஸ்தான் குடிமகன்கள் அவரது தலையை சிரச்சேதம் செய்து மரண தண்டனை அளிக்கப்போவதாகவும், அதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர் தலை வெட்டி எறியப்படுவது உறுதி எனவும் அவருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து அவர் நொய்டா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சைபர் கிரைம் பிரிவு புலனாய்வு செய்து வருகிறது.

நிடாகான் ஏற்கனவே புல்வாமா தாக்குதலில் நாற்பது இந்திய ஜவான்கள் வீர மரணமடைந்த போது பாகிஸ்தானின் செயலை கண்டித்திருந்தார். அப்போது முதல் அவர் மீது மத தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.