4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்பட ஹபீஸ் சயீத், ஷக்கி ரஹ்மான் லக்வி, மசூத் அசார் ஆகியோரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்து உள்ளது. தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.