DR வீரேந்திர குமார் இடைக்கால  சபாநாயகர்

DR வீரேந்திர குமார் இடைக்கால சபாநாயகர்

பாஜக எம்பி வீரேந்திர குமார் 17 வது லோக்சபாவின் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எம்பி ஆவது இதுவே ஏழாவது முறை ஆகும்


ஜூன் 17 துவங்க உள்ள அரசின் முதல் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் புதிய எம்பிகளை இவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். முதல் இரண்டு நாட்களில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புதிய முழுநேர சபாநாயகரை 19ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளார். அதன் பின்னர் இரு சபைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அடுத்த மாதம், 26 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.