'JAI' (ஜெய்) என்றால் வெற்றி

'JAI' (ஜெய்) என்றால் வெற்றி

அர்ஜின்டினா நாட்டின் தலைநகர் பினோஸ் ஐரேஸ் நகரில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே ஆகியோருடன் மூன்று நாடுகள் உறவுகள் குறித்து பேச்சுக்கள் நடத்தினார். பின்னர், இதைப்பற்றி அவர் 'JAI' என்று குறிப்பிட்டார். அதாவது,  J -Japan   A-America   i-India மூன்றும் சேர்ந்தால் வெற்றி . 

இது ஒரு புதிய ஆரம்பம். மூன்று நாடுகளும் சேர்ந்து உலகத்தில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான மிகப்பெரிய பங்காற்ற உள்ளோம். ஜனநாயகத்திற்கு தங்களை அர்பணித்துள்ள மூன்று நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவெடுத்திருக்கும் இது ஒரு நல்ல தருணம். இரண்டு தலைவர்களும் எனக்கு நல்ல நண்பர்களாக உள்ளனர். இரண்டு நாடுகளும் நமக்கு கூட்டணியாக இருப்பார்கள்.

பின்னர், இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலர் விஜய் கோகலே மூன்று தலைவர்களும் இந்திய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். பிரதமரின் வளர்ச்சி திட்டங்களை அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் பாராட்டினார்கள் என்று கூறினார்.