ModiGoBack க்கு பின்னால் பாகிஸ்தான்

ModiGoBack க்கு பின்னால் பாகிஸ்தான்

என்னடா இந்த திராவிடம், தமிழ் தேசியம் பேசற பசங்களுக்கு தமிழே ஒழுங்கா தெரியாதே, எப்படி #ModiGoBack சொல்லி போன வருஷம் 2 லட்சம் ட்வீட் போட்டாங்க அப்படினு யோசிச்சா, பிறகு தெரிஞ்சது அதில பாதி ரோபோ வச்சுப்போட்டது, மீதி டுபாக்கூர்னு.

போன வாரமும் அப்படித்தான், #ModiGoBack னு ஒரே ட்வீட்.   அதை அக்குவேறா, ஆணி வேறா  பிரிச்சு பார்த்தால் தெரியுது, 58 சதவிகிதம் பாகிஸ்தான்காரன் போட்டிருக்கான்.  அது தவிர பல்பொடி விளம்பரம் மாதிரி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா நாடுகளில் இருந்தும் ஒரு 14 சதவிகிதம் போட்ருக்காங்க.  சோமாலியாகாரன் கூட போட்டிருக்கானாம்.  பிறகு மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இருந்தும் ஒரு 20 சதவிகிதம் வந்திருக்காம். தமிழ்நாட்லேந்து கருத்து போட்டவங்க வெறும் 4% தானாம்.  இந்த சுண்டக்காய் 4 சதவிகிதத்திலே எவ்வளவு fake id, பிரியாணி பார்ட்டி அப்படினு தெரியல.

இப்போ சீரியசான விஷயத்திற்கு வருவோம். பாகிஸ்தான் காரனும் சோமாலியா நாட்டுக்காரனும் எதுக்கு சம்மந்தமே இல்லாமல் நம்ம உள்விவகாரங்களில தலையிடனும்?  சோமாலியா பிரதமர் யாருமே நம்ம யாருக்கும் தெரியாது. ஆனால் இங்கே, மோடி எங்கே போறார், என்ன செய்கிறார் என நேரலையில் இங்குள்ளவர்களால் அங்கே தகவல்கள்பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.  

இந்தியாவிற்கு எதிரான பதிவுகளை இங்கிருந்து போட்டால் மாட்டிக்கொள்வோம் என்று அங்குள்ளவர்கள் மூலம் போடுகிறார்கள் இங்குள்ள துரோகிகள்.  நாளை நமது நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இதுப்போன்ற துரோகிகளிடம் நாம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புலனாய்வு துறை நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.